அமர் பிரசாத் ரெட்டிக்கு இந்த நிலையா!! அரசு பேருந்தில் ஏற்றி அனுப்பிய காவல் துறை!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு பிரிவு தலைவரும் தமிழக பாஜக தலைவரின் அண்ணாமலையின் வலது கையாகவும் செயல்பட்டு வந்த அமர் பிரசாத் ரெட்டி பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட போது அரசு வாகனத்தை தாக்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மேலும் சில வழக்குகளில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அம்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக சென்னையில் இருந்து அரசு பேருந்தில் தென்காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அமர் பிரசாத் ரெட்டி அரசு பேருந்தில் ஏறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amar Prasand Reddy going to tenkasi in govt bus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->