அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் விசிக - பாஜகவினரிடையே மோதல்.! - Seithipunal
Seithipunal


இன்று சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து இந்து மதத்தில் கடைபிடிக்கப்பட்ட அத்தனை தீண்டாமை கொடுமைகளையும் அனுபவித்தார். கல்வி மறுக்கப்பட்ட போதிலும் தடைகளை தாண்டி உயர் கல்வி கற்று இந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர் அம்பேத்கர்.

மேலும், இந்து மதத்தை விட்டு வெளியேறி 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி பல லட்சம் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுடன் பௌத்த மதத்தை தழுவினார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மிகப்பெரிய சிற்பிகளில் அண்ணல் அம்பேத்கர் முக்கியமானவர். அவர் பொருளாதார நிபுணராகவும், நீர் மேலாண்மை வல்லுனராகவும் புகழ்பெற்று விளங்கினார்.

இதனையடுத்து இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் அவரது சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பிரச்னை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக, விசிக, தமிழ் தேசிய முன்னேற்றக் கழகம் இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ambedkar statue condolence fight in Thanjavur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->