வக்பு வாரிய மசோதாவில் திருத்தம்?....NDA கூட்டணி பெரும்பான்மை!
amendment in the waqf board nda majority
மாநிலங்களவையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி 6 நியமன உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், இது வக்பு மசோதா திருத்தம் உள்ளிட்டமுக்கிய சட்டங்களுக்கு ஒப்புதல் பெற பா.ஜ.க கூட்டணிக்கு உதவும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் 96 உறுப்பினர்களுடன் பா.ஜ.க அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக உள்ள நிலையில், 113 உறுப்பினர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர்.
மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை 117 தேவை என்ற நிலையில், 6 நியமன உறுப்பினர்கள், பாஜகவிற்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். இதன்முலம் பெரும்பான்மைக்கு தற்போது தேவையான 117ஐ விட இரண்டு அதிகம் ஆகும்.
அதன்படி தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் 119 பேர் உள்ளனர். மேலும் மேல்சபையில் காங்கிரசுக்கு 27 உறுப்பினர்கள் உள்ள நிலையில், அதன் கூட்டணி கட்சிகளின் 58 உறுப்பினர்களை சேர்த்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி எண்ணிக்கை 85 ஆக உள்ளது.
9 உறுப்பினர்களைக் கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், 7 உறுப்பினர்களைக் கொண்ட பி.ஜே.டி.யும் யாரையும் ஆதரிக்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
amendment in the waqf board nda majority