அமித்ஷாவுடன் சந்திப்பு ஏன்? ஆளுநர் ஆர்என் ரவி சொன்ன செய்தி!
AmitShah RNRavi meet TamilNadu Law and Order
தமிழகத்தில் நிலவும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்புடைய சூழ்நிலை குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமிஷாவிடம் ஆலோசனை மேற்கொண்டதாக தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லி சென்ற தமிழக ஆளுநர் ரவி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்தின் நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து இன்று காலை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை சந்தித்த ஆளுநர் ரவி, தமிழகத்தில் உயர் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு உண்டான வழிகள் மற்றும் முறைகள் குறித்து விவாதித்தார்.
மேலும் திறன் மற்றும் கல்வி மூலம் தமிழக இளைஞர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்ட மத்திய அமைச்சருக்கு, ஆளுநர் ரவி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் மத்திய உறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்திருப்பதாவது,
"மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ சந்திப்பை மேற்கொண்டேன். நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது" என்று ஆளுநர் ரவி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை, சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அடுத்தடுத்த புகார்கள் தமிழக ஆளுநருக்கு சென்றுள்ள நிலையில், தமிழக ஆளுநரின் அடுத்தடுத்த இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
English Summary
AmitShah RNRavi meet TamilNadu Law and Order