எடப்பாடிக்கு எதிராக மாணவர் போர்வையில் அமமுக நிர்வாகியா? வைரலாகும் புகைப்படம்.!! - Seithipunal
Seithipunal


முத்துராமலிங்க தேவரின் 116வது குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி விழா நாளை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் நடைபெற உள்ளது. இந்த குருபூஜையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை நடைபெறும் தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள இன்று விமான மூலம் மதுரை செல்கிறார்.

அதேபோன்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பசும்பொனில் நாளை நடைபெறும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் கலந்து கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை அதிமுகவினர் செய்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது என சட்டக் கல்லூரி மாணவர்கள் சார்பில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

அந்த மனுவில் குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான இட ஒதுக்கீடில் 20 சதவீதத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணை வெளியிட்டார். 

இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட 118 சாதிகளும் 68 சீர்மரபினர் சாதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே அந்த அரசாணையால் பாதிக்கப்பட்ட முக்குலத்தோர் சமுதாயத்தினர் அதிக அளவில் கலந்து கொள்ளும் முத்துராமலிங்கர் தேவரின் குருபூஜையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கும் முக்குலத்தோர் சமுதாய தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி அளிக்காமல் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அமைதியான முறையில் குருபூஜை நடத்தித் தருமாறு சட்டக் கல்லூரி மாணவர்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ராமநாதபுர மாவட்ட ஆட்சியரிடம் இந்த மனு வழங்கிய போது சட்டக் கல்லூரி மாணவர்களும் உடன் இருந்தனர். 

இந்த மனுவானது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரால் திட்டமிட்டு வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக தரப்பு தற்போது குற்றம் சாட்டியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய நபர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AMMK executive petition against EPS as student photo Viral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->