இருந்த ஒன்னே ஒன்னு போச்சு.. "அதிமுக வசமாகும் ஒரத்தநாடு பேரூராட்சி".. அமமுக நிர்வாகி மா.சேகர் அதிரடி நீக்கம்..!!
AMMK municipal president Sekar removed from party
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவராக இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மா.சேகர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மா.சேகரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கழகத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக மா.சேகர் செயல்பட்டதால் கட்சியிலிருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்ற ஒரே ஒரு பேரூராட்சி ஒரத்தநாடு மட்டுமே.
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பாக போட்டியிட்டு பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்ற மா.சேகர் உடன் 9 பேரூராட்சி கவுன்சிலர்களும் வெற்றி பெற்றிருந்தனர். இந்த நிலையில் மா.சேகர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக மா.சேகர் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மா.சேகர் இன்று அல்லது நாளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அக்கட்சியில் இருந்து மா.சேகரை நீக்கியுள்ளார்.
English Summary
AMMK municipal president Sekar removed from party