பெட்டி கடையில் குளிர்பானம் என்று நினைத்து ஆசிட்டை குடித்த கல்லூரி மாணவன்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் சைதன்யா (வயது 21). இவர் விஜயவாடாவில், லயோலா கல்லூரியில் பயின்று வருகிறார்.

இவர் கல்லூரிக்கு அருகே உள்ள குளிர்பான கடைக்கு சென்றுள்ளார். கடை உரிமையாளரிடம் தண்ணீர் பாட்டில் கேட்டபோது அவர் குளிர்பான பெட்டியில் உள்ள தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

சைதன்யா தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக ஆசிட் பாட்டிலை எடுத்து குடித்துள்ளார். இதனால் அவரின் வாய் மற்றும் குடல் முழுவதும் வெந்து வலியால் துடித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் கடை உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andra college student drink acid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->