அண்ணா பல்கலை, மாணவி வழக்கு: உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
Anna University case TN Govt Supreme Court
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில், திமுகவின் ஆதரவாளரான ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் முதல் தகவல் அறிக்கை (FIR) வெளியானது தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது.
மேலும், அரசு அனுமதியின்றி செய்தியாளர் சந்திப்பு நடத்தி, வழக்கு குறித்த தகவல்களை வெளியிட்ட சென்னை காவல் ஆணையர் அருண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு எதிராக நீதிமன்றம் தெரிவித்த கருத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை FIR ஆவணம் எவ்வளவு நேரம் பதிவிறக்கம் (download) செய்யும் வகையில் இருந்தது? மாணவி தொடர்பான விவரங்களை வெளியிட்டது யார்? என்று கேள்விகளை எழுப்பியது.
மேலும், FIR ஆவணம் கசிய விட்டவர்களிடமிருந்து 25 லைட்கம் ரூபாயை வசூலித்து மனைவிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மேலும், சென்னை காவல் ஆணையர் மீதான உயர் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்தது.
English Summary
Anna University case TN Govt Supreme Court