மக்களுக்கு G Pay மூலம் ஓட்டுக்கு பணம்... அண்ணாமலை மீது பரபரப்பு  புகார்.! - Seithipunal
Seithipunal


தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் நாளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். நேற்றுடன் பிரச்சார முடிவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக நடத்தி வருகிறது. 

இந்நிலையில் கோவை வடக்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

அதில், கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அலைபேசி மூலமாக வாக்காளர்களை அழைத்து தனது வாக்களிக்குமாறு ஜிபே மூலம் பணம் அனுப்பி வருகிறார். 

மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி நேற்று மாலை உடன் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். 

ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக சட்ட விரோதமாக கோவை பாராளுமன்ற தொகுதியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கி வாக்காளர்களுக்கு ஜிபே மூலம் பணம் விநியோகம் செய்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai against DMK complaint 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->