சீர்கெட்ட ஆட்சி.. ஆணவத்தில் ஆடும் திமுக.!! வெளுத்து வாங்கிய அண்ணாமலை!!
Annamalai condemns Amar Prasad Reddy arrest
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே கொடி கம்பம் நடப்பட்ட விவகாரத்தில் நேற்று பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற கொண்டுவரப்பட்ட ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடிகளை பாஜகவினர் அடித்து நொறுக்கியதால் பதற்றமான சூழல் நிலவியது.
இந்த சம்பவம் தொடர்பாக 110 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தற்போது வரை பாஜகவினர் 6 பேரை கைது செய்துள்ளனர் அதில் குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமாக இருக்கும் தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் இளைஞன் மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி தாம்பரம் நீதிமன்றத்தில் ஆசைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு வரும் நவம்பர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளதால் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் "தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் திரு அமர் பிரசாத் ரெட்டி அவர்களையும், தமிழக பாஜக நிர்வாகிகள் திரு சுரேந்திர குமார், திரு. பாலகுமார், திரு. கன்னியப்பன், திரு. வினோத் குமார், திரு. செந்தில் குமார் ஆகியோரையும், காவல்துறையை ஏவி கைது செய்திருக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஊழலில் கொழுத்த நபர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, திமுகவின் சீர்கெட்ட ஆட்சியை விமர்சிக்கும் ஒரே காரணத்துக்காக பாஜகவினரைப் பழி வாங்கும் திமுகவின் போக்கு நெடுங்காலம் நீடிக்காது. அதிகாரத் திமிரிலும், ஆணவத்திலும் ஆடிக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்" என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
English Summary
Annamalai condemns Amar Prasad Reddy arrest