திமுக வந்த பின் தான் சாதி அரசியல் உருவானது! அண்ணாமலை குற்றச்சாட்டு!! - Seithipunal
Seithipunal


சனாதான தர்மத்திற்கு எதிராக பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், அதனை தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழக முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக அறிவித்திருந்தது.

அதன்படி தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை "பிற மதங்கள் தோன்றுவதற்கு முன்பு சமாதான தர்மம் இருந்தது. சனாதன  தர்மம் பிற மதங்களுக்கு எப்போதும் எதிரியல்ல. பெண்கள் உடன்கட்டை  ஏறுவது சனாதன தர்மம் சொல்லாத ஒன்று.

கடவுளை நம்பாதவர்கள் கடவுளை நம்பர்களை பற்றி தவறாக பேசக்கூடாது. திமுகவின் பட்டியல் இனத்தவரை முதலமைச்சர் பதவியில் அமர வைக்கவில்லை. திமுக வந்த பின் தமிழகத்தில் சாதி அரசியல் உருவானது. சனாதன தர்மத்திற்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சனாதான தர்மம் குறித்து இழிவாக பேசிய உதயநிதிக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சங்கரன் கண்டனத்தை பதிவு செய்கின்றனர். சனாதன தர்மத்திற்கு ஆதியும் கிடையாது முடியும் கிடையாது அது எப்போதும் நிலைத்திருக்கும்" என அண்ணாமலை பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai criticized DMK udhayanithi MKStalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->