குண்டு வெடிப்பு சம்பவங்களை எவ்வாறு கையாள கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு திறனற்ற திமுக அரசு - அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு உட்பட்ட மங்களூர் நகர் நாகுரி பகுதியில் நேற்று இரவு ஆட்டோ ஒன்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுனரும் பயணியும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் ஆட்டோவில் இருந்த குக்கரில் வெடிபொருள் வைக்கப்பட்டிருந்த அடையாளங்களை தடயவியல் நிபுணர்கள் கண்டுபிடித்தனர். மேலும் இந்த சோதனையில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய வயர்கள், பேட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டது. மக்கள் அதிகம் செல்லக்கூடிய மங்களூர் ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக ஆட்டோவில் சவாரி செய்த பணி குறித்தும் கர்நாடக போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து கர்நாடக டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவித்த விளக்கத்தில் "ஆட்டோ குண்டு வெடிப்பு தற்செயலானது அல்ல. கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒரு பயங்கரவாத செயல் நடத்த முயற்சித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மாநில காவல் துறையும் தேசிய புலனாய்வு அமைப்பும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா டிஜிபி விளக்கம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் "குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு குடிமக்களுக்கு செய்தியை சமரசங்கள் இன்றி எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கோவை தற்கொலை படை தாக்குதலுக்குப் பிறகு உயர் காவல் அதிகாரிகளை பொய் சொல்ல வைத்து குண்டுவெடிப்பு சம்பவங்களை எவ்வாறு கையாளக் கூடாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது திறனற்ற திமுக அரசு" என விமர்சனம் செய்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai criticized the DMK govt based on the Karnataka DGP statement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->