அண்ணாமலை நாகரீகமாக பேச மேல்படிப்பு படித்தால் நன்றாக இருக்கும் - கடம்பூர் ராஜு தாக்கு! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றிருப்பது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், அண்ணாமலை ஆராய்ச்சி படிப்பு படிப்பதை விட, அரசியலில் நாகரீகமாக எப்படி பேச வேண்டும் என்பது குறித்து படிக்க வேண்டும் என்றும், அண்ணாமலை அரசியலுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கூட நிறைவு பெறவில்லை. அவர் எடப்பாடி பழனிசாமியின் ஆரம்ப கால அரசியல் குறித்து பேசியிருப்பதாக கூறினார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி மீது கொலை வழக்கு குற்றச்சாட்டு பதிவாகியிருப்பதாக கூறியிருக்கிறார் என்றும், குற்றச்சாட்டு பதிவாகி இருக்கலாம் அதை  நாங்கள் மறுக்கவில்லை என்றும், ஆனால் அந்த வழக்கின் முடிவில் நிரபராதி என்று தீர்ப்பு வந்த பிறகு, அதைப் பற்றி யாரும் பேசக்கூடாது என்பது அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பில்லை  என்று விமர்சித்தார்.  

தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலை நாகரீகமாக பேசுவதற்கு மேல்படிப்பு படித்தால் நன்றாக இருக்கும் என்றும், அதற்கு மாறாக ஆராய்ச்சி படிப்பு படிப்பதால் பயன் இல்லை என்று விமர்சித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai It would be better to study higher to speak politely Kadambu Raju attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->