பிரதமர் மோடி முதுகில் குத்திய நம்பிக்கை துரோகி! "அடிமையாக இருக்க நான் இ.பி.எஸ் இல்லை "- அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி : பாஜகவிற்கும் எனக்கும் பாடம் எடுக்கும் அருகதை எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவித்ததாவது, அதிமுகவின் கோட்டை என்று கூறும் கோவையில் 3 சட்டமன்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்து உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார்.

அதிமுகவிற்கு அடிமையாக இருப்பதற்கு நாங்கள் எடப்பாடி பழனிச்சாமி இல்லை. நம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிச்சாமிக்குதான் பொருத்தமாக இருக்கும். நம்பிக்கை வைத்த பிரதமர் நரேந்திர மோடியின் முதுகிலேயே குத்தியவர்தான் எடப்பாடி பழனிச்சாமி.

எடப்பாடி பழனிச்சாமி மக்களை சந்தித்து வெற்றி பெற்றா முதலமைச்சர் ஆனார்? பாஜகக்கும் எனக்கும் பாடம் எடுக்கும் அருகதை இ.பி.எஸ்க்கு இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai press meet in vikravandi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->