பஞ்சமி நிலம் மீட்க "பாஜகவின் சட்டப்போராட்டம்" தொடரும் - அண்ணாமலை அதிரடி.!! - Seithipunal
Seithipunal


பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் வரை  பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும்.!!

கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக நிர்வாகி சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்தில் முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாகவும், அதனை மீட்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார்.அந்த புகாரின் அடிப்படையில் அப்போதைய தேசிய பட்டினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன் முரசொலி அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனவும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முரசொலி அறக்கட்டளை காவலர் ஆர்.எஸ் பாரதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முரசொலி அறக்கட்டளை அமைந்துள்ள நிலம் தொடர்பான வழக்கில் பட்டியலின ஆணையம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு ஆர் எஸ் பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம், பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டிய திமுகவோ, இதற்குப் பதில் கூறுவதைத் தவிர்த்து வருவது பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.


பட்டியலின ஆணையம் விசாரிக்கத் தடை கோரி திமுக தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திமுக இனியும் விசாரணையைத் தள்ளிப் போட முயற்சிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai said Legal action continue until recover Panchami land


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->