தமிழகமே அதகளப்படுகிறது - பெரும் அதிர்ச்சில் அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு நாளும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் அரங்கேறுகிறது. கொலை, கொள்ளை என்று தமிழகம் அதகளப்படுகிறது என்று, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டாக குற்றங்களே நடைபெறவில்லை என்று சட்டமன்றத்தில் பேசினால் போதுமா?

ஒவ்வொரு நாளும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் அரங்கேறுகிறது. கொலை, கொள்ளை என்று தமிழகம் அதகளப்படுகிறது.

தமிழக அரசுக்கு முக்கியமான பல பிரச்சினைகள் இருக்கின்றன. பல கவலைகள் இருப்பதால், சட்டம்-ஒழுங்கை பற்றி கவலைப்பட நேரம் இல்லை.

பெண்களுக்கு தருவதாக சொன்ன உரிமைத் தொகை என்ன ஆச்சு? தங்க நகைக்கடன் தள்ளுபடி வழங்குவது என்ன ஆச்சு? பெட்ரோல் விலை குறைப்பேன் என்ற வாக்குறுதி என்ன ஆச்சு? இது மட்டுமில்லாது மக்களை அச்சுறுத்தி வாயை மூட வைக்க நடத்தப்படும், ‘லாக் அப்’ மரணங்கள்.

மகளிருக்கும், குழந்தைகளுக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் அச்சுறுத்தல் தொடருமானால் பா.ஜ.க. மக்களை ஒன்றுதிரட்டி வீதிக்கு வந்து போராடும் என்பதை தெரிவிக்கிறேன்"

இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai say about tamilnadu now


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->