தமிழகத்தில் பயங்கரவாதம் தலை தூக்க சாதகமான சூழல்., தமிழக அரசை எச்சரிக்கும் அண்ணாமலை.!   - Seithipunal
Seithipunal


சட்டம், ஒழுங்கு நன்றாக இருந்தால் தான் தமிழகம் அமைதியாக இருக்கும். தமிழகத்தில் பயங்கரவாதம் தலை தூக்க சாதகமான சூழல் உள்ளது: அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்று நெல்லை மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,

"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நல்லபடியாக இருந்தால்தான் தமிழகம் அமைதியாக இருக்கும், தமிழகத்தில் இப்போது பயங்கரவாதம் தலைதூக்க  சாதகமான சூழல் உள்ளது. எனவே தமிழக அரசு உடனே இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கொழும்பு ஈஸ்டர் தானம் அன்று நடந்த குண்டு வெடிப்புக்கும் தமிழகத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக தமிழர்கள் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். 

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை நக்சல்பாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மார்த்தாண்டத்தில் உதவி காவல் ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டது மத அடிப்படைவாதிகளின் செயல்தான்.  

ஒருபுறம் சாத்தான்குளம் போன்ற சம்பவங்களும், மறுபுறத்தில் காவல்துறைக்கு போதிய அதிகாரம் இன்மை போன்ற முரண்பாடுகளும் தமிழகத்தில் நிலவி வருகிறது" என்று அண்ணன்மாலி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai say about tn law and order issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->