பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அப்படியே திமுக அரசு பக்கம் தலையை திருப்பும் அண்ணாமலை.!
annamalai thanks to pm modi and question to dmk govt
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ள நிலையில், திமுக அரசு இந்த முறையாவது விலையை குறைக்குமா?" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம். இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/xfvseagf.png)
மேலும், இந்த ஆண்டு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் 9 கோடி பயனாளிகளுக்கு ஒரு காஸ் சிலிண்டருக்கு (12 சிலிண்டர்கள் வரை) 200 ரூபாய் மானியம் வழங்குவோம் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"மீண்டும் பெட்ரோல்,டீசல் விலையை குறைத்த மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி.
கண்டும் காணாமல், கேட்டும் கேட்காமல், மக்கள் நலன் கருதாத எதிர்க் கட்சிகள், குறிப்பாக திமுக அரசு இந்த முறையாவது குறைக்குமா? என தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
annamalai thanks to pm modi and question to dmk govt