ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : தொடரும் கைது வேட்டை - மேலும் ஒரு வழக்கறிஞர் கைது..!! - Seithipunal
Seithipunal



பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் அருகேயுள்ள மாத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி மர்ம நபர்களால் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலேயே வெட்டிக் கொலை செய்யப் பட்டார். இதுவரை இந்த வழக்கில் தனிப்படை போலீசார் 17 பேரை கைது செய்துள்ளனர். 

ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப் பட்டுள்ளதாகக் கூறி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுக வழக்கறிஞர் அருள், பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்டம் மணலி அருகே உள்ள மாத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவா என்பவரை தனிப் படை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். வழக்கறிஞர் சிவாவுக்கும், தேடப் பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலுக்கும் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது. 

மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் ரவுடி சம்போ செந்தில், வழக்கறிஞர் சிவா மூலம் தான் கொலையாளிகளுக்கு பணப் பரிவர்த்தனை செய்துள்ளதாகவும் வழக்கறிஞர் சிவாவிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து வழக்கறிஞர் சிவா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட பின்னர், பூவிருந்தவல்லி சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Another Lawyer Arrested in Armstrong Murder Case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->