அறிவு கெட்ட ஆட்சியாளர்கள் - மக்களுக்கு அறிவில்லையா என்று கேட்பார்கள் - அறப்போர் இயக்கம் கண்டனம்!
Arappor iyakkam condemn to DMK Govt MK Stalin
சென்னை கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று இந்த பூங்கா மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட உள்ள நிலையில், நேற்று இரவு இங்கு fountain-ல் வர்ணஜாலம் செய்யப்பட்ட காட்சிகள் வெளியாகி இருந்தது.
இந்த பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்.
இந்த பூங்கா திறப்பிற்கான விழா ஏற்பாடுகள் அரசு தரப்பிலும் திமுகவினர் தரப்பிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அறப்போர் இயக்கம் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த விழாவுக்காக திமுகவினர் சாலை ஓரங்களில் திமுகவின் கொடி கம்பம் நட்டு வைத்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "சாலைக்கு நடுவில் ஆபத்தான கொடி கம்பங்கள் மற்றும் மின்சார இணைப்பு வயர்களை இவர்கள் வைத்து விட்டு, விபத்து நேரிட்டால் மக்களுக்கு அறிவில்லையா என்று கேட்பார்கள்.
விழா நடத்தனும். விளம்பரம் தேடனும். மக்கள் நசுங்கினாலும் பிதுங்கினாலும் அதை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லாத அறிவு கெட்ட ஆட்சியாளர்கள்" என்று கடுமையாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
English Summary
Arappor iyakkam condemn to DMK Govt MK Stalin