ஊழல் விவரங்கள் வெளியாகிறது! வசமாக சிக்கிய திமுக அமைச்சர்? அதிரடியில் இறங்கிய அறப்போர் இயக்கம்!
Arappor Iyakkam DMK Minister scam case
திமுகவை சேர்ந்த அமைச்சர் ஒருவர் மீதான ஊழல் குறித்த விவரங்களை அறப்போர் இயக்கம் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் செய்கின்ற தவறு மற்றும் ஊழல் குறித்து விசாரித்து, அதனை மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியில் அறப்போர் இயக்கம் செய்து வருகிறது.
மேலும் அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் வழக்குகளில் சிக்கி உள்ளதும் அரங்கேறி உள்ளது.
அண்மையில் கூட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதியாமல் இருப்பது, போக்குவரத்துறை மோட்டல்கள் குறித்த விவரங்களை வெளியிட்டு ஆளும் திமுக அரசை ஆட்டம் காண வைத்துள்ளது.
கடந்த காலங்களில் அறப்போர் இயக்கத்தின் புள்ளி விவரங்களை, ஊழல் புகார்களை சுட்டிக்காட்டி, தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய, அப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின், அரசியல் ரீதியாக பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
இந்த நிலையில், முதலமைச்சர். முக ஸ்டாலின் அமைச்சரவையில் இருக்கக்கூடிய ஒரு அமைச்சர் குறித்த துறையின் ஊழல் விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக அறப்போர் இயக்கம் தனது சமூக வலை தலை பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த அமைச்சர் யார்? அவரின் துறை என்ன? என்பது குறித்த சிறு குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
முதல் பதிவு :
அறப்போர் இயக்கத்தின் அடுத்த ஊழல் வெளியீடு விரைவில். என்ன ஊழல் என்ற செய்தி படத்தில் இருக்கிறது.
இரண்டாம் பதிவு :
நேரடியா என்ன ஊழல் யார் செய்த மோசடி என்று சொல்லி விடலாம் தான். ஆனால் இந்த ஊழல் பற்றியும் மோசடி அமைச்சர் பற்றியும் அதிகம் மக்களிடம் கொண்டு செல்ல இதை எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த ஊழல் மீது பத்திரிக்கைகளின் கவனத்தை திருப்ப இது போல பல யுக்திகளை கையாள வேண்டி இருக்கிறது.
ஆளுங்கட்சியின் ஊழலை எதிர்க்கட்சியை பேச வைப்பதும், எதிர்க்கட்சி செய்திருந்த ஊழல் மீது ஆளுங்கட்சியை நடவடிக்கை எடுக்க வைப்பதுமே தமிழ்நாட்டில் அத்தனை கடினமான விஷயமாக இருக்கும் போது ஒரு ஊழலை ஆதாரங்களுடன் வெளியிட்டு அதை கையில் இருக்கும் சமூக வலைத்தள ஆதரவுடன் மக்களிடம் கொண்டு செல்ல இன்னும் நாம் கடின முயற்சிகளை செய்ய வேண்டி இருக்கிறது. அதிகமாக பரப்ப நீங்களும் உதவி செய்யுங்கள்.
சரி.. யாரெல்லாம் சரியாக கண்டுபிடிக்கிறீர்கள் என்று பார்க்கலாம்.
English Summary
Arappor Iyakkam DMK Minister scam case