அங்கயர்கண்ணியால் வந்த சிக்கல்.., முதல்வர் ஸ்டாலினுக்கு சரமாரி கேள்விகள்.!  - Seithipunal
Seithipunal


சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கக் கூடிய அறப்போர் இயக்கம், தற்போது பள்ளிக்கரணை சதுப்பு நில நில விவகாரத்தில் ஒரு கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருகிறது.

இது குறித்து அந்த இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பத்திரப்பதிவு விவகாரத்தில் அங்கயர்கண்ணி மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில். தற்போது அவர் பத்திரப்பதிவு மோசடிகளை கண்டுபிடிக்கக் கூடிய பதவியில் அமர வைக்கப்பட்டு உள்ளார்" இதற்க்கு அறப்போர் இயக்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து அந்த இயக்கத்தை சேர்ந்த சிலர் பல கேள்விகளை தமிழக முதல்வருக்கு எழுப்பி வருகின்றனர்.

அதில், பத்திரப்பதிவு மோசடி செய்த அங்கயர்கண்ணி, தற்போது பத்திரப்பதிவு மோசடிகள் கண்டுபிடிக்கும் பதவியில் இருக்கிறாராம்? இவரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடுவாரா தமிழக முதல்வர்?

"கோட்டையில் உட்கார்ந்துகொண்டு உத்தரவு போடும் முதல்வர் அல்ல நான்" என்று தமிழக முதல்வர் தெரிவித்த நிலையில், இது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஏன் பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழல் ஊழல் குறித்து தமிழ் செய்தி சேனல்கள் பேசவில்லை. ஏன் தமிழ் நாளிதழ்கள் இதுகுறித்து போடுவதில்லை.,? 

எங்களது ஒவ்வொரு ஊழல் வெளியீட்டிற்குப் பிறகும் இந்த கேள்விகளுக்கு எங்களுக்கு விடை தெரியவில்லை.

ஆனால் அவர்கள் போட மாட்டார்கள் என்பது மட்டும் தற்போது பரிச்சயம் ஆகிவிட்டது. போட்டால் தான் அவர் அதிசயம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ARAPPOR IYAKKAM MK STALIN


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->