ரூ.3,970,000,000.00! ஊழல் செய்வதில் கூச்சமே இல்லாத திமுக அரசு..! ஆதாரம் இங்கே.. FIR எங்கே? அறப்போர் இயக்கம் கிடுக்குப்பிடி!
Arappor iyakkam report DMK Govt Scam MKStalin Senthilbalaji
அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வருடம் 90 கோடி செலவில் தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை என்று ஒரு துறை செயல்படுகிறது. ஆனால் ஊழல் புகார்களை கொடுத்தால் அதை தலைக்கு வைத்து குறட்டை விட்டு தூங்கி விடுகிறார்கள்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து புகாரை விசாரிக்க உத்தரவிடுமாறு கேட்டால் அதற்கு பதில்அளிக்க நீதிமன்றம் கொடுத்த அவகாசத்தை சற்றும் மதிக்காமல் திமுக அரசு அலட்சியம் செய்கிறது.
இப்படிப்பட்ட ஒரு மோசடி அரசாங்கத்தை சிலர் எப்படி நல்லாட்சி என்று சொல்லி தலையில் வைத்து கரகாட்டம் ஆடுகிறார்களோ தெரியவில்லை..!
ஜூன் மாதம் கொடுக்க வேண்டிய பதிலை எப்போ சார் கொடுப்பீங்க..?
ஒரு Transformer வாங்குவதில் 1.81 லட்சம் ஊழல். இது போல 2000 Transformerகள் திமுக ஆட்சியில் டெண்டர் செட்டிங் செய்து அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. ஆனால் இதை பற்றி திமுகவில் ஒருவரும் வாய் திறக்கவில்லை. அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரை விசாரிக்கவும் திமுக அரசுக்கு துணிவில்லை" என்று தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு - https://youtu.be/KqfXcR99rDQ
English Summary
Arappor iyakkam report DMK Govt Scam MKStalin Senthilbalaji