தி.மு.க., கூட்டணியில் கருத்து முரண்பாடுகள் உள்ளது..? திருமாவளவன் பரபரப்பு..!
Are there differences of opinion in the DMK alliance Thirumavalavan
''தி.மு.க., கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. கருத்து முரண்கள் இருந்தாலும் கூட கட்டுக்கோப்பாக ஒற்றுமையாக இருக்கிறோம்.'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது: ''தி.மு.க., கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. கருத்து முரண்கள் இருந்தாலும் கூட கட்டுக்கோப்பாக ஒற்றுமையாக இருக்கிறோம். என்பதுதான் அவர்களுக்கு சிக்கல். ஆகவே இல்லாதது பொல்லாததெல்லாம் சொல்கிறார்கள்.'' என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், ''மற்றபடி அதில் சொல்வதற்கு எதுவும் இல்லை. கூட்டணியில் இருந்து கொண்டே வெளிப்படையாக தான் போராட்டம் நடத்துகிறோம்.'' என்றும் அவர் தெளிவு படுத்தியுள்ளார்.
மேலும், ''கட்சிக்குள் ஒரு நெருக்கடியும் இல்லை. தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தை ஒரு அங்கம். கூட்டணியை உருவாக்கியதில் விடுதலை சிறுத்தைக்கும் பங்கு உள்ளது. அந்தக் கூட்டணியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் விடுதலை சிறுத்தைக்கு உள்ளது.'' என்று மதுரையில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியுள்ளார்.
English Summary
Are there differences of opinion in the DMK alliance Thirumavalavan