திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு போறீங்களா?...முடிச்சூர் பேருந்து எப்போது OPEN?...அமைச்சர் அறிவித்த முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர்,  மாதவரம் பேருந்து நிலையத்தில் பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தற்போது விழா காலங்களிலும் கூட அதிகளவு பயணிகள் பயன்படுத்தும் அளவில் நல்ல தரத்தோடு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்த அவர்,  விரைவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக கூறினார்.

வரும் 7-ம் தேதி திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவிற்கு 6 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று  எதிர்பார்க்கப்படுவதாகவும், அங்கு பக்தர்களுக்கு தேவையான கழிப்பிட வசதி, தீயணைப்பு வாகனம், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் மாதவரம் பேருந்து நிலையம், அண்ணாநகர் கிழக்கு முழு நேர நூலகத்தின் பணிகளையும் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Are you going to tiruchendur kanda shashti festival when will mudichur bus open important announcement announced by the minister


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->