வீடு புதுந்து போலீசார் தாக்கியதில் விவசாயி பலி | ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் அண்ணாமலை!
Ariyalur Justice for Sembulingam annamalai
காசாங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் மரணத்துக்கு நீதி கேட்டு, இன்று அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், "காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலால் அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையைச் சேர்ந்த விவசாயியும், தமிழக பாஜகவின் தொண்டருமான அண்ணன் செம்புலிங்கம் உயிரிழந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உயிரிழந்த அண்ணன் செம்புலிங்கத்தின் மகன் மணிகண்டனை இன்று திருச்சியில், மாநில பொதுச் செயலாளர் கருப்பு, அரியலூர் மாவட்ட தலைவர் அய்யப்பன் ஆகியோருடன் சந்தித்து ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொண்டோம்.
உயிரிழந்த செம்புலிங்கத்துக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். மணிகண்டனிடம் காசாங்கோட்டையில் உள்ள அவர்களது இல்லத்திற்கு வந்து அவரது தாயாரை சந்திப்பேன் என்று உறுதி அளித்துள்ளேன்.
இந்த குற்றச் சம்பவத்திற்கு காரணமான காவல்துறையினரின் மேல் திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று (டிச.11) அரியலூர் மாவட்டத்தில், உயிரிழந்த செம்புலிங்கம் மரணத்துக்கு நீதி கேட்டு, திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்" என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
English Summary
Ariyalur Justice for Sembulingam annamalai