சனாதன விவகாரம் தொடர்பில், உதயநிதிக்கு எதிராக பிடிவாரண்ட்..? உதயநிதி ஜெயிலுக்கு போவார் என்கிறார் எச். ராஜா..! - Seithipunal
Seithipunal


சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற மாநாடு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதி  இந்த மாநாடு நடத்தப்பட்டது. 

குறித்த, மாநாட்டில் உரையாற்றிய உதயநிதி, "இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள் என்று கூறியிருந்தார்.

அத்துடன், சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்" என்று தெரிவித்திருந்தார்.

உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியதற்கு நாடு முழுவதும் உள்ள பாஜக, இந்துத்துவ தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் உதயநிதி மீது வழக்கு பதியப்பட்டது. 

இந்நிலையில், சனாதன விவகாரத்தில் விரைவிலேயே உதயநிதி கைது செய்யப்படுவார் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய எச். ராஜா, "கூடிய விரைவில் எல்லா மாநிலங்களிலும் உதயநிதிக்கு எதிரா பிடிவாரண்ட் வந்து விடும். சீக்கிரமாகவே ஜெயிலுக்கு போய் விடுவார். சனாதன இந்து தர்மத்தை நீ டெங்கு கொசு மலேரியா கொசு மாதிரி கொன்னுடுவியா? அவ்ளோ திமிரு உங்களுக்கு இருக்கா?

துணை முதல்வர் என்றால் பெரும்பான்மையாக உள்ள 80% மக்களை கொல்லலாமா? அவர்களை டெங்கு, மலேரியா கொசு மாதிரி அழிப்பேன்னு பேசுவாரா?

அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் யார் இந்த சார் ஏன்னு சொல்ல உதயநிதிக்கு துப்பு இல்லை. ஆனா இந்து மதத்தை கொசு மாதிரி கொல்லலாம் என்று அவர் பேசலாமா?
இந்த தேச விரோத தீய சக்திகள் 2026 இல் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்படுவார்கள்" என்று அவர் மேலும்தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arrest warrant issued against Udhayanidhi in connection with Sanatana issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->