அசாமில் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை கடந்த 14-ம் தேதி மணிப்பூரின் தவுபாலில் தொடங்கியது. இந்த யாத்திரை 67 நாள்களில் 110 மாவட்டங்கள் வழியாக 6,700 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடக்க உள்ளது

இந்த நிலையில், பாத யாத்திரையின் 5-வது நாளான நேற்று நாகாலாந்தின் துலியில் இருந்து அசாமின் ஜோர்ஹாட் வரை நடைபயணம் ஆரம்பமானது. அசாமில் உள்ள சிவசாகரில் ராகுல் காந்தியின் யாத்திரை நுழைந்தது.

இந்த யாத்திரையானது அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு வழி மாறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அசாம் போலீசார் தாமாக முன் வந்து கூட்ட நெரிசல் -போக்குவரத்து பாதிப்பால் வழக்குப்பதிவு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

assam police case file congrass former leader ragulgandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->