அவர்தான் குற்றவாளி என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள்? தகவல்துறையை கேள்விகளால் கிழித்தெடுத்த உயர்நீதிமன்றம்!
AU Student Case Chennai HC TN POlice
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அடையாறு பகுதியில் உணவகம் நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் ஆளும் திமுக கட்சியை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய முடிவு செய்தது.
வழக்கறிஞர் வரலட்சுமி எழுதிய கடிதத்தை ஏற்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் இந்த வழக்ஜ்களை இன்று விசாரித்தனர்.
அப்போது நீதிபதிகள், தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் சராமாரியான கேள்விகளை எழுப்பினர். அதில், குற்றத்தை தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை என்று தெரிவித்த நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கை கசிய வில்லை என்றால் வழக்கு எண் பதியப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் விசாரணையின் போதே ஒருவர் குற்றவாளி தான் என காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், விசாரணை அதிகாரி ஆணையருக்கு கீழ் பணிபுரிபவர் என்றும் அவரை எப்படி மற்றொருவரை கண்டுபிடித்தார் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஒரு வழக்கில் மட்டும்தான் ஞானசேகருக்கு தொடர்பு உள்ளது என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள் என்றும், கைது செய்யப்பட்டவர் காலில் கட்டு ஏன் போடப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
English Summary
AU Student Case Chennai HC TN POlice