சட்டப்படி நடவடிக்கை பாயும்.. ஈபிஎஸ்.,க்கு ஏவி ராஜு வக்கீல் நோட்டீஸ்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பில் கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுக்கு எதிராக செயல்பட்ட ஏ வி ராஜுவை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் நீக்குவதாக அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஏ.வி ராஜு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகை திரிஷா மற்றும் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் உள்ளிட்டர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். 

விவகாரம் பெரும் சர்ச்சை கிளப்பிய நிலையில் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் ஏ.வி ராஜு. இருப்பினும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் மற்றும் நடிகை திரிஷா சார்பில் ஏவி ராஜுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது ஏவி ராஜு அத்திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார் அதில் தன்னை நீக்குவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கட்சி விரோத நடவடிக்கை என்ன என்பதை விளக்கவில்லை எனவும், கட்சியிலிருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avraju sent notice to Aiadmk EPS


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->