பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்கில் மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு கருத்தரங்கு; தவெக முடிவு..!
Awareness seminar among female students aimed at preventing sexual crimes TVK concludes
தமிழகம் முழுவதும் மாணவிகள் மத்தியில் பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு வருகிற 08-ந்தேதி குறித்த கருத்தரங்கை நடத்த தவெக திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த அக்கட்சி சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி சார்பில் மாணவிகள் மத்தியில் பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Awareness seminar among female students aimed at preventing sexual crimes TVK concludes