அடித்த அடியில் ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொன்னாரா விஜய்? என்ன சொல்கிறார்கள் நெட்டிசன்கள்! - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி மாதம்  தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், ஆகஸ்ட் மாதம் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி, விரைவில் முதல் மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருந்தார். 

அதன்படி, வருகின்ற 27ஆம் தேதி விக்ரவாண்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தான் கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் குறித்த அறிவிப்புகளை நடிகர் விஜய் வெளியிடுவார் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, விசேஷ நாட்கள் மற்றும் மதப் பண்டிகைகளின் வாழ்த்துக்களை தவறாமல் நடிகர் விஜய் வெளியிட்டு வந்திருந்தார். ஆனால், விநாயகர் சதுர்த்திக்கு திமுகவை போலவே நடிகர் விஜயும் வாழ்த்து தெரிவிக்காதது பாஜக மற்றும் இந்து மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் அவருக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், இன்றைய ஆயுத பூஜைக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாள்களில். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்" என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நடிகர் விஜய் தனது கட்சி அனைத்து மக்களுக்குமான அரசியல் கட்சி என்பதை உறுதி செய்துள்ளதாக பல்வேறு சமூகவலைத்தள வாசிகளும் வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர். அதே சமயத்தில் விநாயகர் சதுர்த்திக்கு அடித்த அடியில் ஆயுத பூஜைக்கு வாழ்த்து வந்துள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

இன்னும் சிலர், அடுத்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு அவர் வாழ்த்து தெரிவிக்கப்பபோவதில்லை. காரணம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் அதிக மத மோதல், வெறுப்பு இருப்பதால் என்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayutha pooja Vijayadhasami TVK Vijay wish Tamizhaga Vetri kazhagam 


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->