பிக் பாஸ் 8 தமிழில் அதிரடி திருப்பம்!...வீட்டிட்டிற்குள் மீண்டும் நுழைந்தார் சாச்சனா! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் சேதுபதி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். கோலாகலமாக கடந்த  தொடங்கி ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில்  பல்வேறு போட்டியாளர்களை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வரவேற்று பிக் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.

இதற்கிடையே, நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான மகாராஜா, திரையரங்குகளில் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பை பெற்றது . இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான இப்படம் சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது.  

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா என்பவர்,  பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார்.  தொடர்ந்து  வீட்டிற்குள் நுழைந்த 24 மணி நேரத்தில் ஒருவரை நாமினேட் செய்து வெளியே அனுப்ப வேண்டும் என்று டாஸ்க் வந்தது.

அதன்படி அதிகம் நாமினேட் செய்யப்பட்டு வீட்டில் இருந்து  சாச்சனா போட்டியாளர் வெளியேறினார். சாச்சனா போட்டியில் இருந்து வெளியேறியது நியாயமற்றது என்பது சமூக வலைத்தளத்தில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், வைல்ட் கார்டில் இன்று மீண்டும்  பிக் பாஸ் இல்லத்திற்கு சாச்சனா சென்றுள்ளார். இவரின் வருகைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bigg boss 8 tamil action twis chachana re entered the house


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->