இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கிய அம்பேத்கரின் நினைவு தினம் இன்று..!
b r ambedkar memorial day
அம்பேத்கர் :
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கிய அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (தற்போது மாவ் என்ற பகுதி டாக்டர் அம்பேத்கர் நகர் என்ற பெயரில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளது) என்ற இடத்தில் பிறந்தார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் பலமுறை துயரங்களை அனுபவித்தார். ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியர் அவரின் மீது பாசமாக இருந்ததால் பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர் என்ற பெயரை, பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.
உயர்கல்வி பயில்வதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர். பிறகு 1923ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தபிறகு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா என்ற அமைப்பை நிறுவினார்.
1930ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோவில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார். இறுதியில், 1956ஆம் ஆண்டு புத்த மதத்தில் இணைந்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடு இணையற்ற ஜோதியாய் விளங்கிய பி.ஆர்.அம்பேத்கர், 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி மறைந்தார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
English Summary
b r ambedkar memorial day