பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பாபா ராமதேவ்! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!
Baba Ramdev apologises
பெண்கள் ஆடை அணிய விட்டாலும், அழகாக தெரிகிறார்கள் என்ற, தனது சர்ச்சை பேச்சுக்கு, பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்து இரு தினங்களுக்குமுன் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பதஞ்சலி யோகா மையம் சார்பாக யோகா அறிவியல் முகாம் மற்றும் மகளிர் கூட்டம் நடைபெற்றது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ரிதா பட்னாவிஸ் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு. பதஞ்சலி நிறுவன தலைவரும், யோகா குருவுமான பாபா ராம்தேவ் தலைமை தாங்கினார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய பாபா ராம்தேவ், 'பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள். சல்வாரிலும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் ஆடை அணியவில்லை என்றாலும் அழகாக தெரிகிறார்கள்' என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதற்க்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது கருத்து தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள, ராம்தேவ் மன்னிப்பு கேட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும், மகாராஷ்டிர மகளிர் ஆணையத் தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "பெண்களை அவமரியாதை செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. எனது கருத்தால் யாரேனும் புண்பட்டிருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று ராம்தேவ் தெரிவித்துள்ளார்.