என்ன நடக்கிறது வங்கதேசத்தில் ..? பதவி விலகிய ஷேக் ஹசீனா டாக்காவை விட்டு தப்பியோட்டம்..!! - Seithipunal
Seithipunal


கடந்த 1971ம் ஆண்டு வங்கதேசத்தின் சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வங்கதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் அனைவரும் கடந்த ஜூலை மாதம் போராட்டத்தில் குதித்தனர். 

இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் காவல்துறையை ஏவி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொன்றதற்கு நீதி கேட்டு நேற்று (ஆகஸ்ட் 4) பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வங்கதேசத்தின் மத்திய சதுக்கத்தில் கூடி போராட்டம் நடத்தினர். 

நாடு முழுவதும் உள்ள நகரங்களில் நடந்த இந்த போராட்டத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்றும், இனி யாரும் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அனைத்து தரப்பு தொழிலாளர்களையும் வேலை நிறுத்தம் மேற்கொள்ளவும் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்தனர். 

இதில் போராட்டக்காரர்கள் கட்டிடங்கள், வாகனங்களுக்கு தீ வைத்ததால், போலீசார் கையெறி குண்டுகளை வீசினர். இதில் 14 போலீசார் உட்பட 88 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து நேற்று மாலை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதுடன், இணைய சேவையும் முடக்கப் பட்டது. 

இந்நிலையில் தான் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, டாக்காவை விட்டு வெளியேறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அங்கு ராணுவ ஆட்சி பிரகடனப் படுத்தப் படும் என்று தெரிகிறது. இதனிடையே போராட்டக்காரர்கள் பிரதமரின் உத்தியோகப் பூர்வ இல்லத்திற்குள் நுழைந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangladesh Prime Minister Sheik Hasina Resigned and Leaving The Country


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->