நாங்க போரிடவில்லை., எங்களுக்கு அவசியமும் இல்லை., வெளியான அச்செய்திக்கு விளக்கமளித்த அதிபர்.!
Belarus SAY ABOUT UkraineRussiaWar
உக்ரைன் - ரஷ்ய இடையே இன்று ஆறாவது நாளாக போர் உச்சம் அடைந்துள்ளது. இரு நட்டு வீரர்களும் கடுமையாக தாக்கி வருகின்றனர்.
போர் நிறுத்தம் குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மீண்டும் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று இரு நாடுகளும் அறிவித்துள்ளன.
அதே சமயத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இணைவதற்கான விண்ணப்பத்தை உக்ரைன் நாடு கொடுத்திருப்பது, ரஷ்யாவை மேலும் கோபமடைய செய்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக ஆறாவது நாளாக இன்று போர் உச்சம் அடைந்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ரஷ்யா தனது வான்வெளி தாக்குதலை சற்று முன்பு தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் நாடும் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கி உள்ளதாக செய்திகள் வந்தன.
இந்நிலையில், உக்ரைன் நாட்டின் வடக்குப் பகுதியிலிருந்து பெலாரஸ் இராணுவம் தாக்குவதாக வெளியான செய்திக்கு பெலாரஸ் நாடு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனை உள்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சாண்டர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் உடன் போரிட அவசியம் பெலரசுக்கு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
English Summary
Belarus SAY ABOUT UkraineRussiaWar