பாஜகவுக்கு எதிராக சுத்தும் போடும் எதிர்கட்சிகள்.. சந்திரசேகர ராவின் தேசிய கட்சியின் கொடி அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் புதிய அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் அறிமுகம் செய்துள்ளார்.

தேசிய அளவிலான அரசியலில் கவனம் செலுத்திடும் முயற்சியில் இறங்கியுள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ், தனது கட்சியை தேசிய கட்சியாக அறிவித்திருந்தார்.

அதன்படி, வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் தெலுங்கானா மாநில முதல்வரும், பாரத ராஷ்டிரிய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். 

அந்த வகையில் தேசிய அளவில் மாற்று கட்சி தொடங்குவது குறித்து கருத்து ஒற்றுமை ஏற்பட்டதை அடுத்து விரைவில் தேசிய கட்சி தொடங்கப்படும் என்றும் அதற்கான கொள்கைகள் வகுக்கும் பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிர சமிதி என பெயர் மாற்றம் செய்து தேசிய கட்சியாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் இயங்கி வந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி (TRS) கட்சியின் பெயரை பாரத ராஷ்டிர சமிதி (BRS) என மாற்ற தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது பாரத ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளார்.

இதனிடையே டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி குஜராத் சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் உயர்ந்த நிலையில், நேற்று தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றது.

அதன் காரணமாக வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கடும் நெருக்கடி நிலவும் என கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharat Rashtriya samiti national party Flag introduce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->