#BigBreaking || இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார்.! அதிகாரபூர்வ அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவ மற்றும் 13 பேருடன் இன்று பிற்பகலில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டது.

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே அந்த ஹெலிகாப்டர் பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. விழுந்து நொறுங்கிய உடன், ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது. 

உடனடியாக மலைவாழ் கிராம மக்கள் முதலில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், இராணுவம், காவல்துறை, மீட்புப்படையினர் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் ராணுவ அதிகாரிகள் உட்பட 11 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் உயிரிழந்துள்ளார். இதனை இந்தியன் ஆர் போர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bibin Rawat dead


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->