அவர்களை பெண்களாக கருத முடியாது.. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!
They cant be considered women Protest against Supreme Court verdict
திருநங்கைகளை பெண்களாக கருத முடியாது' என இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக இங்கிலாந்தில் சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் அமைப்பினர், போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அண்மையில் இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் , சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கில் பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும், திருநங்கை களை பெண்களாக கருத முடியாது என்றுதீர்ப்பு அளித்துள்ளது.இந்த தீர்ப்பு இங்கிலாந்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
மேலும் இந்த தீர்ப்பு பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்ததையடுத்து இங்கிலாந்தில் சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் அமைப்பினர், போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்தில் திருநங்கை உரிமைகளுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் அமைப்பினர், லண்டன், எடின்பர்க்கில் பேரணி நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள வாக்குரிமை பெற்ற மில்லி சென்ட் பாசெட் சிலை உள்பட 7 சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதுமட்டுமல்லாமல் ஓரின சேர்க்கையாளர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்துவர்களை கண்காணித்து எச்சரித்து வருகின்றனர்.
English Summary
They cant be considered women Protest against Supreme Court verdict