குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரம் - குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு.!
drinking water samples sanalysis for drinage water mix
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கழிவு நீர் கலந்த குடிநீர் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் மூன்று பேர் உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதி மக்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பாட்டிலில் பிடித்தவாறு நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே மாசுபட்ட குடிநீர் காரணமாக 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவதற்கு மாநகராட்சி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதுடன் அப்பகுதியில் 6 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் எந்திரங்கள் கொண்டு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் ஆங்காங்கே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி ஆணையர் வே. சரவணன் தெரிவித்துள்ளார்.
சார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
English Summary
drinking water samples sanalysis for drinage water mix