மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு நேரில் வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.!
Birthday wishes to old politician nallakannu
இரா.நல்லகண்ணு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். நல்லகண்ணு அவர்களுக்கு இன்று 97 வது பிறந்தநாள். இதற்காக அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நல்லக்கண்ணுவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள சிபிஐ கட்சி அலுவலகத்தில் நல்லக்கண்ணுவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகனும் மற்றும் சேகர் பாபு, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ர. முத்தரசன், திருப்பூர் எம்.பி. சுப்பராயன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஸ்ரீ மகேந்திரனாகியோர் உடன் இருந்தனர்.
ஐயா நல்லக்கண்ணு வை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர், "ஐயா நல்லகண்ணு அவர்கள் தமிழக அரசியலில் முன்னோடி. தலைவர் கலைஞர் அவர்களுக்கு உற்ற நண்பனாக விளங்கியவர். பாசிசத்திற்கு எதிரான நம் போராட்டத்தில் ஐயா அவர்கள் நமக்கு வழிகாட்டியாக விளங்குவதோடு, இந்த வயதிலும் தமது பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கிறார்.
தகைசால் தமிழர் விருது ஐயாவிற்கு வழங்கப்பட்டதில் அந்த விருதே பெருமை கொள்கிறது. இந்த இனிய பிறந்தநாள் தருணத்தில் ஐயாவை வாழ்த்தி வணங்குவதில் பெருமை கொள்கிறேன். என்றென்றும் அவர் எங்களுக்கு ஆசனாக இருந்து எங்களை வழி நடத்தவேண்டும் என்று தனது வாழ்த்தில் கூறினார்.
மேலும் மதிமுக செயலாளர் வைகோ, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரும் ஐயா நல்லக்கண்ணுவிற்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.
English Summary
Birthday wishes to old politician nallakannu