எங்கே போனார் வி. கே. பாண்டியன்?! தேர்தல் முடிவுக்கு பிறகு ஆளே காணோம்?! - Seithipunal
Seithipunal



நாடு முழுவதும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தலும் நடந்தது. இதில் ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதாதளம் படு தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த 24 வருடங்களாக ஒடிசாவின் முதலமைச்சராக ஆட்சி செய்த நவீன் பட்நாயக்கின் பிஜேடி கட்சி 147 சட்டப்பேரவை தொகுதிகளில் 51 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. அங்கு பாஜக முதல் முறையாக 79 இடங்களை வென்று ஆட்சியமைத்துள்ளது. 

மேலும் 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றில் கூட பிஜேடி வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் வலதுகையாக இருந்த வி. கே. பாண்டியன் யார் கண்ணிலும் படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் ஆளுநரிடம் ராஜினாமாக் கடிதம் அளிக்கச் சென்ற முதல்வருடனும் வி. கே. பாண்டியன் செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது. முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகையாக இருந்த வி. கே. பாண்டியன் எங்கே? என்பது தான் தற்போது பிஜேடி கட்சியினரின் கேள்வியாக உள்ளது.

இதுகுறித்து பிஜேடியின் மூத்த எம் எல் ஏ சௌம்யா ரஞ்சன் பட்நாயக் கூறுகையில், "இந்த பாண்டியன் யார்? எங்கிருந்து எதற்காக பிஜேடி க்குள் வந்தார்? இவர் எப்படி தேர்தலின் போது கட்சிப் பணத்தில் ஹெலிகாப்டரில் சுற்றி வந்தார்? இவருக்கு யார் கட்சியில் இந்த அதிகாரங்களை அளித்தது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJD Party Peoples Asking About V K Pandiyan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->