கொத்தடிமைகள், ஒப்பாரி! "நீயா நானா"வில் திமுகவின் ஸ்கிரிப்ட் அரசியல்?! பாஜக நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "01.03.2025 அன்று நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நீங்கள் பேச வேண்டும் என்று எனக்கு ஒரு அழைப்பு வந்தது.நான் சிறிது நேரத்தில் கூப்பிடுகிறேன் என்று அழைப்பை துண்டித்து விட்டேன்.பிறகு எனக்கு மீடியாவில் நன்கு தெரிந்த ஒருவரிடம் பேசினேன் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளலாமா என்று அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

இது திமுகவின் ஸ்கிரிப்ட் எனவும்.தலைப்பு மட்டும் தான் மும்மொழி கொள்கை ஆதரவு மற்றும் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு ஆனால் எடுத்துச் செல்வது தமிழ் VS  இந்தி என்று எடுத்துச் சொல்வார்கள்.ஸ்கிரிப்டு உடைய சுருக்கம் என்னவென்றால் மும்மொழிக்கு ஆதரவாக ஒரு பெண்ணும் மும்மொழிக்கு எதிர்ப்பாக அந்தப் பெண்ணுடைய தந்தையும் பேசுவது தான் ஸ்கிரிப்ட் எனவும்.நிகழ்ச்சியின் முதல் பகுதியில் மும்மொழிக்கு ஆதரவுவாக பேசும் பெண்ணை நன்றாக பேச விடுவார்கள் இரண்டாம் பகுதியில் அந்த பெண்ணுடைய தந்தை பேசுவார்.இவர்களுடைய கதை சுருக்கம் என்னவென்றால் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பேசும் பெண்ணை.மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பாக பேசும் தந்தை அடக்குவது தான். 

பெண்ணை விடியற்காலையில் தனியார் இந்தி வகுப்பிலும் இரண்டாவது மொழியாக இந்தியை தேர்ந்தெடுத்து படிக்கும் பள்ளிக்கூடத்திலும் படிக்க வைத்துள்ளார் தற்போது அந்த பெண் கல்லூரி வரை வந்து விட்டார் ஆனாலும் அந்த பெண்ணுக்கு இந்தி ஒரு வார்த்தை கூட பேச தெரியவில்லை என்பது தந்தையின் குற்றச்சாட்டு.தன்னுடைய மகளை காசு கொடுத்து 8வயது முதல் 18வயது படிக்க வைத்து ஒரு வார்த்தை கூட இந்தி பேச தெரியவில்லை.இதனால் மூன்றாவதாக ஒரு மொழியை படிப்பதினால் எந்த ஒரு பலனும் இல்லை என்று நிகழ்ச்சியை நிறைவு செய்வார்கள் சொன்னார் அந்த நிகழ்ச்சியை நான் தவிர்த்து விட்டேன்.

கிழ் நிகழ்ச்சி நடந்த சில புகைப்படங்கள் அந்த நிகழ்ச்சி 9.00நேரம் எடுக்கப்பட்டும் சரியாக வரவில்லை.அதனால் நீயா நானா குழுவினர் அதை தவிர்த்து இருக்கலாம்.தான் இயற்றிய நாடகத்தை அரங்கேற்ற முடியவில்லை என்று திமுக ஐடி விங்க் கொத்தடிமைகள் சமூக வலைத்தளத்தில் ஒப்பாரி வைத்துக்கொண்டு உள்ளனர்.

இந்த ஸ்கிரிப்ட்டில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மும்மொழிக்கு கொள்கைக்கு எதிர்ப்பாக பேச களம் இறங்கியவர்களில் 60% திமுகவினர்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Alisha say about Neeya Naana DMK Script


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!


செய்திகள்



Seithipunal
--> -->