ஸ்ஸ்பா!!! இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை குறைய வாய்ப்பு...! - சென்னை வானிலை ஆய்வு மையம்
Temperature likely to drop for next 4 days from today Chennai Meteorological Department
சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது,"தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இயல்பை விட, 4° செல்ஷியஸ், பிற மாவட்டங்களில்,2° செல்ஷியஸ் வரை வெப்பம் குறைந்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள்,காரைக்கால் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் 23ம் தேதி வரை, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், இன்று முதல் 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை ஒட்டியும், சில இடங்களில் இயல்பை விட குறையவும் வாய்ப்புள்ளது.
மேலும் இன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை, 35° செல்ஷியசை ஒட்டி காணப்படும்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, அதிக பட்சமாக கரூர் மாவட்டத்தில் உள்ள, கரூர் பரமத்தியில், 101° பாரன்ஹீட் அதாவது, 38.5 ° செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
இதைத்தொடர்ந்து சேலம், திருப்பத்துார், வேலுார் நகரங்களில் தலா, 100° பாரன்ஹீட் அதாவது, 38° செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.இதனால் மக்கள் கோடை வெயிலை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் திணறுகின்றனர்.
English Summary
Temperature likely to drop for next 4 days from today Chennai Meteorological Department