உதயநிதி அவர்களே அமைச்சரானால் அரசாங்கம் உங்களுடையது அல்ல - பாஜக அமர் பிரசாத் ரெட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சராக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மகனும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பட்ட மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும், திமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் நடிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு தலைவரான அமர் பிரசாத் ரெட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை எச்சரிக்குமா வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் 'உதயநிதி அவர்களே, நான் அமைச்சர் ஆயிட்டேன், நான் தான் அரசாங்கம், நான் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நினைத்து விடக்கூடாது.எங்களிடம் அசைக்க முடியாத ஒரு சக்தி இருக்கிறது அதற்கு பெயர் தான் அண்ணாமலை' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Amar Prasad Reddy warning to udhayanithi Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->