தமிழகம் வரும் அமித் ஷா! பா.ஜ.க. மாநிலத் தலைவர் முடிவானதா?!
BJP Amit Shah chennai visit
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் சென்னை வர இருந்தார். பின்னர், அவரது பயண தேதியில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாதம் அவர் தமிழகம் வருவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் படி, வரும் ஜனவரி 31-ந்தேதி அமித் ஷா தமிழகம் வருவதாகவும், சென்னையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளாதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையில் நடைபெறும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் மாற்றம் குறித்த ஆலோசனை கூட்டத்திலும் அமித் ஷா பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மதுரையில் டங்ஸ்டன் சுரங்க திட்ட ரத்து தொடர்பான பாராட்டு விழா நடக்க உள்ளதாகவும், இதில் கிஷன் ரெட்டி உடன் அமித் ஷா பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
BJP Amit Shah chennai visit