திமுக அரசைக் கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை!
BJP Annamalai condemn to DMK MK Stalin
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்று காலை தமிழக அரசைக் கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தி உள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நேற்று அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
மேலும், இதற்க்கு மேலும் திமுகவை ஆட்சி செய்ய விடக்கூடாது, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் காலனி அணிய மாட்டேன் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில், கோவையில் தனது வீட்டுக்கு வெளியே, பச்சை நிற வெட்டி அணிந்து தன்னைத் தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொண்டு அண்ணாமலை போராட்டம் நடத்தி உள்ளார்.
English Summary
BJP Annamalai condemn to DMK MK Stalin