பாஜகவின் தேசிய பொறுப்பில் அண்ணாமலை!
BJP Annamalai new posting
பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பதவி வகித்துவந்த அண்ணாமலை, தற்போது அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமாரும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன், எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா, ஏஜி சம்பத், பால் கனகராஜ், வினோத் பி. செல்வம் ஆகியோரும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, சென்னை, வானகரத்தில் நடைபெற்ற கட்சி விழாவில், பாஜக மாநிலத் தலைவராகப் போட்டியின்றி நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
English Summary
BJP Annamalai new posting