ஹிந்தி சொல்லித்தரும் திருமாவளவனின் சொந்த சிபிஎஸ்இ பள்ளி! அம்பலப்படுத்திய அண்ணாமலை!
BJP Annamalai VCK Thirumavalavan Hindi School
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்க துடிப்பதாக கூறி, தி.மு.க தலைமையிலான கூட்டணியின் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக-வின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star Secondary School என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர், திருமாவளவன் தான்.
அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளியின் ஆதாரங்களை வெளியிட்டு அவருக்கும் அண்ணாமலை கேள்வி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
BJP Annamalai VCK Thirumavalavan Hindi School